Monday, September 10, 2012

இறைவன் நல்லவர்

கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது, என்று பக்தன் சங்கிதம் 118 : 01 இல் கூறுகின்றான். இதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகின்றது என்னவென்றால் அவர் நல்லவர் ஆனபடியினால் அவரை துதியுங்கள் என்று சொல்லப்படவில்லை அவரை துதியுங்கள் அவர் நல்லவர் என்று உறுதிபட கூறுகின்றார். எனனில் அவர் எப்பொழுதுமே எல்லோருக்கும் அவர் நல்லவர் சில வேளைகளில் நமக்கு எற்ப்படும் அசாதாரணமான சூழ்நிலைகள் இறைவன் நல்லவரா?.... என்று நம்மை சிந்திக்க துண்டும் அப்படியான வேளைகளிலும் இறைவன் நல்லவரே… என நான் உறுதிப்பட கூறுகின்றேன். அதற்கு சில காரணங்களை முன் வைக்கின்றேன்.

1. எல்லா உயிரினங்களையும் இறைவனே படைத்தார். ஆனால் மனிதனை விஷேசித்த விதமாக தமது சாயலாக படைத்தார் ஆகவே அவர் நல்லவர் அவனை சிந்திக்கும் படியாக சிறந்தவற்றை தெரிவு செய்யும் படியாக நிறைவான ஆற்றலை அவனுக்கு கொடுத்தார். ஆகவே அவர் நல்லவர். அதுமட்டுமல்லாது இப்பூமியில் உனக்கு எற்படும் அசாதாரணமான சூழ்நிலையின் போது நான் நல்லவரா? என சோதித்தறிவதை விட்டு விட்டு என்னை நோக்கி கூப்பிடு நான் உனக்கு மறு உத்தரவு கொடுப்பேன் எனக்கூறியிருக்கின்றாரே (அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான். நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன். ஆபத்தில் நானே அவனோடிருந்துää அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். சங் 91 : 15 )

ஆகவே அவர் நல்லவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக தம் ஜீவனை நமக்காக தந்து பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்டெடுத்து நம்மோடு நித்தமும் உறவாட காத்திருக்கிறாரே… ஆகவே அவர் மிகவும் மிகவும் நல்லவர்

ஆகவே நமக்கு நம்முடைய வாழ்வில் எப்பேற்பட்ட காரியமாக இருந்தாலும் இறைவன் நல்லவர் என்பதை நம் நினைவில் நிறுத்தி வாழக்கற்றுக்கொண்டால் அவர் நமக்கு எப்பொழுதும் மிகவும் மிகவும் நல்லவர்.

ஆகவே கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.

No comments:

Post a Comment